முதல்நாளே கொரோனா வார்டில் ஆய்வுசெய்த கலெக்டர்… நெகிழ்ச்சி சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நேற்று பிரபுசங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதோடு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டு கொரோனா வார்டு வரை சென்று அங்குள்ள நோயாளிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரபுசங்கர் முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து “தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு” எனும் திருக்குறளுக்கு ஏற்ப, நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, காலம் தாழ்த்தாமை என சிறப்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் செயல்படும் என்று கூறினார். அதோடு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி மாவட்டம் முழுவதும் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும் அவரது மேஜையில் திருவள்ளுவர் சிலை, அம்பேத்கர் சிலை இரண்டையும் ஒன்றாக வைத்து எல்லோருக்கும் எல்லாம் என்னும் வாசகத்தையும் அவர் தெரிவித்தார். அதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பிரபுசங்கர் கொரோனா வார்டுக்கும் சென்றுள்ளார்.
கவச உடையணிந்து கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட அவர், கர்ப்பிணி பெண் ஒருவரைப் பார்த்து “தைரியமா இருங்க… விரைவில் குணமாவீங்க.. நம்பிக்கைதான் கொரோனாவை வெல்லும் முதல் ஆயுதம்” எனக் கூறி நெகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் அந்த மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு உட்பட அனைத்தையும் அவர் பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.
பொறுப்பேற்றுக் கொண்ட முதல்நாளே கொரோனா வார்டு வரை சென்று ஆய்வுமேற்கொண்ட பிரபுசங்கர் குறித்து தற்போது கரூர் மக்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதால் கொரோனா தீவிரம் அவருக்கு புரிந்து இருக்கிறது எனவும் கருத்து வெளிப்படுத்தி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com