இன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: என்ன நடக்குது தமிழகத்தில்?
- IndiaGlitz, [Monday,August 10 2020]
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்பதும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும் பிற பகுதிகளில் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி தினமும் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று கூட சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் அவர்களுக்கும், திருச்சி மணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ்க்கு எதிரான நடவடிக்கை எடுக்கவேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்றும் ஒரு திமுக எம்எல்ஏ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு பரவியுள்ளதால் தமிழகத்தில் என்ன நடக்குது? என்ற கேள்வியே எழுந்துள்ளது