கருப்பனின் கலக்கலான ஓப்பனிங் வசூல்

  • IndiaGlitz, [Monday,October 02 2017]

விஜய்சேதுபதி ஏற்கனவே இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியை ருசித்துவிட்ட நிலையில் கடந்த வாரம் வெளியான அவரது அடுத்த படமான 'கருப்பன்' திரைப்படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள் சுமாரான படம் என்றே விமர்சனம் செய்தன.

ஆனால் ஊடகங்களின் விமர்சனத்திற்கு மாறாக ரசிகர்களின் வரவேற்பு இருந்ததால் இந்த படம் தமிழகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றது. குறிப்பாக சென்னையில் இந்த படம் 18 திரையரங்க வளாகங்களில் 215 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.93,39,432 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு 90% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

மேலும் இந்த படத்தின் பி மற்றும் சி செண்டர்களின் வசூல் திருப்திகரமாக இருப்பதாகவும், இந்த படம் விஜய்சேதுபதியின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துவிட்டதாகவும் விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

More News

மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' ஓப்பனிங் வசூல் எப்படி?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மகேஷ்பாபு முதன்முதலில் இணைந்த 'ஸ்பைடர்' திரைப்படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படம் கடந்த 27ஆம் தேதி வெளிவந்தது.

சீயான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் தமிழ்ப்படம்

சீயான் விக்ரமின் மகன் துருவ் கடந்த சில மாதங்களாகவே தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது.

பிரபல இயக்குனரின் படத்தில் முதல்முறையாக கார்த்திக்-கவுதம் கார்த்திக்

தமிழ் சினிமாவில் தந்தை-மகன் இணைந்து நடிப்பது புதிதல்ல. சிவாஜி-பிரபு, சிவகுமார்-சூர்யா, சத்யராஜ்-சிபிராஜ், விஜயகாந்த்-சண்முகப்பாண்டியன் என உண்மையான தந்தை-மகன் நடித்த படங்கள் பல உள்ளது

'குறள்' தலைப்பு படத்தில் தமிழுக்கு அறிமுகமாகும் பிரபல தெலுங்கு நடிகரின் மகன்

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு தற்போது ஆங்கிலப்படம் மற்றும் மணிரத்னம் படம் ஆகியவற்றில் நடிக்க தயாராகி வரும் நிலையில் அவர் இசையமைத்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.