'கருப்பன்' திரைப்பட இயக்குனரின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,January 29 2022]

ரேணிகுண்டா, கருப்பன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ’கருப்பன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆர் பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களாக ‘ஐஸ்வர்யா முருகன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படம் ரிலீசுக்கு கடந்த டிசம்பர் மாதமே தயாராகிய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 11ஆம் தேதி ‘ஐஸ்வர்யா முருகன்’ படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ரேணிகுண்டா, கருப்பன், போலவே இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தில் இயக்குனர் பன்னீர்செல்வத்தின் மகன் அருண் பன்னீர்செல்வம் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் வித்யா பிள்ளை, தேவேந்திரன், ஹரிஷ், சாய் சங்கீத், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா என்பவர் இசையமைத்துள்ளார்.