அரசியல் என்பது வியாபாரம் அல்ல. ரஜினி அரசியல் குறித்து கருணாஸ்

  • IndiaGlitz, [Monday,June 26 2017]

நகைச்சுவை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'அரசியல் என்பது வியாபாரம் அல்ல, சேவை மனப்பான்மை உள்ளவர்கள் யாரும் அரசியலுக்கு வரலாம்' என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாஸ் கூறியதாவது: 'மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு உள்ளவர்கள் யாரும் அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது வியாபாரம் அல்ல, அரசியல் என்பது மக்களுக்கான பணி, சேவை. அந்த சேவை மனப்பான்மை உள்ளவர்கள் எவராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு பிடித்திருந்தால் அவர்கள், அவர்களை ஆதரிப்பார்கள்.

அரசியலுக்கு ஒரு வரலாம், வரக்கூடாது என்று கூறுவதற்கு இந்த ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமை இல்லை' என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

More News

ஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் தல அஜித்-சிறுத்தை சிவா

எம்.ஜி.ஆருக்கு ஒரு ப.நீலகண்டன், சிவாஜிக்கு ஒரு பீம்சிங், கமல்ஹாசனுக்கு ஒரு கே.பாலசந்தர், ரஜினிக்கு ஒரு எஸ்பி முத்துராமன் போல் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு குறிப்பிட்ட இயக்குனருடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிடுவதுண்டு...

வரும் டிசம்பரில் ஜெய்-அஞ்சலி திருமணம்?

அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா நட்சத்திர ஜோடிகளை அடுத்து ஜெய்-அஞ்சலி ஜோடி காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கமல், ரஜினி பாணியில் களமிறங்கும் விஜய்மில்டன்

ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி என்பது குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்வதே என்று திரையுலகினர் கூறுவதுண்டு.

'மாநகரம்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்

இந்த ஆண்டு வெளிவந்த வெற்றிப்படங்களில் ஒன்று 'மாநகரம்' என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயம் ரவியின் 'வனமகன்' ஓப்பனிங் வசூல் விபரங்கள்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'வனமகன்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது...