த்ரிஷா விவகாரத்தில் 2வது முறையாக புகார் அளித்த கருணாஸ்.. இந்த முறை யார் மீது?

  • IndiaGlitz, [Saturday,February 24 2024]

நடிகர் கருணாஸ் ஏற்கனவே தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜூ மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் கூவத்தூர் விவகாரம் குறித்து பேட்டி அளித்த போது ’த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கூறிய வகையில் பேசினார். அதுமட்டுமின்றி நடிகர் கருணாஸ் குறித்தும் அவர் பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே நடிகர் கருணாஸ் காவல்துறையில் ஏவி ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தன்னை பற்றி எந்தவிதமான ஆதாரமும் இன்றி, அவதூறு கருத்துக்களை யூட்யூபில் சிலர் பரப்பி வருவதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் நடிகை த்ரிஷா மற்றும் சில நடிகைகளை நான்தான் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என உண்மைக்கு மாறான கருத்துக்களை யூட்யூபில் சிலர் பரப்பி வருகின்றனர், எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி பொய்யான தகவலை பரப்பி என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன், எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.