ரஜினிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது ஏன்? கருணாஸ் கருத்து
- IndiaGlitz, [Tuesday,February 11 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் வருமான வரியை சரியாக செலுத்தவில்லை என 66 லட்சம் வருமானவரி அலுவலகம் அபராதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து ரஜினிகாந்த் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்ய, இந்த அபராதத்தை வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது
ஆனால் இதனை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென வருமான வரித்துறை இந்த வழக்கை வாபஸ் பெற்றது. ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராத தொகை இருப்பதால் இந்த வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் அறிவித்தது. மேலும் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதத்தொகை இருந்தால் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என அரசு கொள்கை முடிவு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது
ஆனால் ரஜினிகாந்த் அவர்களுக்காகவே மத்திய அரசு இந்த சலுகை காட்டி உள்ளதாகவும் அவருக்காகவே ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதம் இருந்தால் விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு சலுகை அளித்திருப்பதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய நடிகரும், திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியபோது ’நடிகர் ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பேசுவதால் வருமான வரித்துறை அவருக்கு விலக்கு அளித்து இருக்கலாம்’ என்று கூறியுள்ளார். கருணாஸின் இந்த கருத்திற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்