என்னாலும் வாக்குகளை பிரிக்க முடியும்: கருணாஸ் ஆவேசம்

  • IndiaGlitz, [Wednesday,February 27 2019]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் சசிகலா, தினகரன், திமுக என மாறி மாறி ஆதரவு கொடுத்து கொண்டிருந்த நடிகரும் எம்.எல்.வுமான கருணாஸ், சமீபத்தில் முதல்வரை சந்தித்து அதிமுகவுக்கு மீண்டும் ஆதரவு அளித்தார்.

ஆனால் பாமக, பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் மீண்டும் அதிமுக எதிர்ப்பு நிலையை கையில் எடுத்துள்ள கருணாஸ், 'என்னை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்றும் என்னால் தென்மாநிலங்களில் வாக்குகளை பிரிக்க முடியும்' என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

மெலும் கஜா புயலின்போது தமிழகம் வராத பிரதமர் மோடி, குமரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகிறார் என்றும், அவருக்கு தங்கள் அமைப்பின் சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

எனது சமூகத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்கத்தயார் என்று கூறிய கருணாஸ், கூட்டணிக்காக திமுக அழைத்தாலும் வரவேற்போம் என்று கூறினார்.

மேலும் ஜெயலலிதா எங்களுக்கு அளித்த மரியாதையை தற்போது உள்ள அதிமுகவினர் எங்களுக்கு அளிப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

More News

சீனுராமசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது

'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' சென்சார் தகவல்

'பியார் பிரேமா காதல்' வெற்றி படத்தை அடுத்து பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' என்ற திரைப்படம் வரும் மார்ச் 15ஆம் தேதி வெளியாகும்

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை உயிரோடு எரித்த வாலிபர்!

தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்யுமாறு வாலிபர் ஒருவர் கட்டாயப்படுத்தியதாகவும் ஆனால் அதற்கு அந்த மாணவி மறுத்துவிட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்

பாமகவில் இருந்து விலகிய ரஞ்சித்தை இணைத்து கொண்ட பிரபல கட்சி!

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத்தலைவரான ரஞ்சித் விலகினார் என்பதை நேற்று பார்த்தோம்.

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியடிப்பு!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நேற்று பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்த நிலையில்