மருத்துவமனையில் கருணாஸ் அனுமதி: முன்ஜாமீன் கேட்டும் மனுதாக்கல்

  • IndiaGlitz, [Wednesday,October 03 2018]

திருவாடனை எம்.எல்.ஏ மற்றும் நடிகருமான கருணாஸ் சமீபத்தில் முதலமைச்சரை சர்ச்சைக்குரிய பேசியதாக கூறப்பட்ட வழக்கிலும், காவல்துறை அதிகாரி குறித்து தவறாக பேசிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நெல்லையில் தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை சேதப்படுத்தியதாக கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார் இன்று சென்னை வந்துள்ளனர். இதனையடுத்து இன்று அதிகாலை கருணாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் நெல்லையில் காரை சேதப்படுத்தியது பற்றிய வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என கருணாஸ் தரப்பில் இருந்து மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முன்ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்ற கிளை நாளை விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

More News

ஊழலை ஒழிப்பேன்னு சினிமாக்காரங்க சொன்னா நம்பாதிங்க: தமிழ் இயக்குனர்

திரையுலகினர் உள்பட யார் அரசியலுக்கு வந்தாலும் மக்களிடம் தரும் முதல் வாக்குறுதி 'ஊழலை ஒழிப்பேன்' என்பதுதான்.

நிஜத்தில் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்: விஜய்

'சர்கார்' படத்தில் தான் முதலமைச்சராக நடிக்கவில்லை என்றும், ஒருவேளை தமிழகத்தின் முதலமைச்சராக ஆனால், நிஜத்தில் முதல்வராக நடிக்க மாட்டேன்'

'சர்கார்' விழாவில் விஜய் கூறிய குட்டிக்கதை

நேற்று நடைபெற்ற விஜய்யின் 'சர்கார்' பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஒரு குட்டிக்கதையை கூறி அசத்தினார்.

இந்த 'சர்கார்' அந்த சர்காரை சரிசெய்ய வேண்டும்: ராதாரவி

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

கமல் கட்சியில் நான் இணைய ரஜினியே காரணம்: ஸ்ரீப்ரியா

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.