நடிகர் சங்கத்தில் கருணாநிதிக்கு கிடைத்த அங்கீகாரம்

  • IndiaGlitz, [Friday,February 19 2016]

சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்ததால் நடிகர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருந்து வந்த மு.கருணாநிதி உள்பட ஒருசிலர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாததால் அவர்கள் வாக்களிக்கவில்லை.


இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை வாக்களிக்கும் உரிமை கொண்ட ஆயுள் கால உறுப்பினராக மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தால் இனிவரும் நடிகர் சங்க தேர்தலில் கருணாநிதி வாக்களிக்கும் உரிமையை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 1989ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

20 வருடங்களுக்கு பின் சிவாஜி குடும்பத்துடன் இணையும் விஜய்

லி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வரும் நிலையில் 'விஜய் 60'...

''தோழா'' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

கார்த்தி முதன்முதலாக நாகார்ஜூனனுடன் இணைந்து நடித்த ''தோழா'' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...

ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்த 'பாகுபலி' நடிகை

தமிழ், தெலுங்கு, இந்தி என் மூன்று மொழிகளில் கலக்கி வரும் நடிகை ஸ்ருதிஹாசன் பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்...

சிவகார்த்திகேயனின் ரெமோவில் இணையும் நடிகரின் மகள்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தில் பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகா முக்கிய வேடத்திலும் விஜய்யின்...

ரஜினியுடன் இணையும் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'கபாலி'...