சக்கரநாற்காலியில் அமர்ந்த கருணாநிதி: உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் அவருடைய உடல்நிலையில் பின்னடைவு இருந்தாலும் அதன்பின்னர் சிகிச்சைக்கு ஏற்ப அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் படுக்கையில் இருந்து சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் வெளியூரில் இருந்து வந்திருக்கும் திமுக தொண்டர்கள் அவரவர் ஊர்களுக்கு செல்லலாம் என்று திமுக எம்பியும், கருணாநிதி மகளுமான கனிமொழி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து திமுக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout