திமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ். காவேரி மருத்துவமனை அறிக்கையின் முழுவிபரம்
- IndiaGlitz, [Friday,December 23 2016]
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இன்று மாலை கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி ஆகியோர் அவரை பிரத்யேக வாகனத்தின் மூலம் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் பார்வையாளர்கள் அவரை பார்ப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை குறைப்பதற்காக 'டிரக்கியோஸ்டமி' டியூப் மேலும் சில வாரங்களுக்கு அவர் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் காவேரி மருத்துவமனையின் மருத்துவக்குழு ஒன்று அவரது வீட்டில் இருந்தே தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணிக்கும்' இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.