கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி

  • IndiaGlitz, [Thursday,March 01 2018]

திமுக  தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி இருந்த நிலையில் அவரது உடல் தற்போது நல்ல முறையில் தேறி வருவதாகவும், அவருக்கு பேச்சுப்பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதால் அவர் விரைவில் கம்பீரமாக பேசுவார் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதி மனதளவில் உற்சாகமாக அருள்நிதியின் மகனும் கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமான மகிழன் கருணாநிதியின் இல்லத்தில் கடந்த சில நாட்களாக உள்ளார். மகிழனின் மழலை பேச்சால் கருணாநிதி உற்சாகம் அடைவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் கருணாநிதி தனது கொள்ளுப்பேரன் மகிழனுடன் கிரிக்கெட் விளளயாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கருணாநிதி வீல்சேரில் உட்கார்ந்தபடியே பந்து தூக்கி போட, அதை மகிழன் பேட்டிங் செய்கிறார். மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, பந்தை திரும்ப எடுத்து கருணாநிதியிடம் தருகிறார். இந்த வீடியோ கருணாநிதியின் உடல் நன்கு தேறி வருவதை காட்டுவதால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More News

கமல் கட்சியுடன் கூட்டணியா? சரத்குமாரின் அதிரடி பதில்

'கமல்ஹாசனுடன் நான் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும். தேவையென்றால் அவர்தான் என்னுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என்று சரத்குமார் கூறினார்.

நீதிக்கு நீதி வேண்டும்: மத்திய மந்திரிக்கு எதிராக கமல் கட்சியின் அறிக்கை

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

காலா டீசர்: ரஜினி ரசிகர்களுக்கு திடீர் ஏமாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் டீசர் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த டீசர் வெளியாக இன்னும் ஒருசில நிமிடங்களே

4700 பேர்களில் ஸ்ரீதேவியும் ஒருவர்! எப்படி தெரியுமா?

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனியன்று துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த நிலையில் இன்று அவரது உடல் லட்சக்கணக்கான ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு இடையே தகனம் செய்யப்பட்டது.

ஒரு திரைப்படத்தின் விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்? நித்யாமேனன் கருத்து

தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நாயகிகளில் ஒருவராகிய நித்யாமேனன், நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது உடல் எடை குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.