கருணாநிதி மறைவு: தலைவர்கள் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய மறைவால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே சோகக்கடலில் மூழ்கியுள்ளது. இந்திய அளவில் மூத்த அரசியல்வாதியும், சாணக்கியராகவும் இருந்த கருணாநிதியின் மறைவு உண்மையில் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே ஒரு பெரும் இழப்பு தான்.
இந்த நிலையில் கருணாநிதியின் மறைவு குறித்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்: திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி: இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் திமுக தலைவர் கருனாநிதி. அவரது மறைவை கேட்டு துயரமடைந்தேன்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கருணாநிதியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com