கருணாநிதி மறைவு: தலைவர்கள் இரங்கல்

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய மறைவால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே சோகக்கடலில் மூழ்கியுள்ளது. இந்திய அளவில் மூத்த அரசியல்வாதியும், சாணக்கியராகவும் இருந்த கருணாநிதியின் மறைவு உண்மையில் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே ஒரு பெரும் இழப்பு தான்.

இந்த நிலையில் கருணாநிதியின் மறைவு குறித்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்: திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி: இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் திமுக தலைவர் கருனாநிதி. அவரது மறைவை கேட்டு துயரமடைந்தேன்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கருணாநிதியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

More News

டெல்லியில் இருந்து அவசரமாக சென்னை திரும்புகிறார் கமல்ஹாசன்

திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி காலமானதை அடுத்து தமிழகமே சோகக்கடலில் மூழ்கியுள்ளது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மோடி, ராகுல்காந்தி சென்னை வருகை: 

திமுக தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை காலமானார். திமுகவின் உதயசூரியனாக இருந்த கருணாநிதியின் மறைவால் அக்கட்சியினர் மிகுந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்

 என் வாழ்நாளில் ஒரு கருப்பு நாள்: ரஜினிகாந்த் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. திமுக தொண்டர்கள் கதறி அழுது தேற்றுவதற்கு கூட ஆளில்லாமல் உள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற திட்டமிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.