மெரினாவில் கருணாநிதி சமாதி: கட்டுமான பணிகள் ஆரம்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு சற்றுமுன்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் அண்ணா சமாதியின் பின்னால் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. செங்கல் உள்பட கட்டுமான பொருட்கள் அண்ணா சமாதிக்குள் கொண்டு செல்லப்படுகிறது. இன்று மாலைக்குள் கட்டுமான பணிகள் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் நல்லடக்கம் செய்யும் நேரம் அறிவிக்கப்படும் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னதாக அண்ணா நினைவிடத்தின் வலதுபுறத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யும் இடம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com