கருணாநிதி இறுதி ஊர்வலம் புறப்படும் நேரம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை அண்ணா சமாதிக்கு பின்புறம் கருணாநிதிக்கு சமாதி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் ராஜாஜி அரங்கத்தில் இருந்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை வழியாக, தந்தை பெரியார் சிலை, அண்ணா சிலையை கடந்து அதன் பின்னர் அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்திற்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செல்லவிருப்பதாகவும் இறுதி ஊர்வலத்தில் திமுக தொண்டர்கள் அமைதி காத்திட வேண்டும் என்ரு திமுக அறிவித்துள்ளது.

More News

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: தமிழக அரசு மேல்முறையீடா?

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இன்று காலை உத்தரவிட்டதை அடுத்து

கருணாநிதிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தி குறித்து பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கருணாநிதி சந்தித்த 14 இந்திய பிரதமர்கள்

திமுக தலைவர் கருணாநிதி தனது 80ஆண்டு கால அரசியல் வாழ்வில் இந்தியாவின் 14 பிரதமர்களை சந்தித்துள்ளார். வேறு எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத இந்த  பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு

மெரினாவில் கருணாநிதி சமாதி: கட்டுமான பணிகள் ஆரம்பம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு சற்றுமுன்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருணாநிதி மறைவு: விஜய்யின் 'சர்கார்' படக்குழுவின் அதிரடி முடிவு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அமெரிக்காவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.