கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்: காவேரியில் குவியும் திமுக பிரமுகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது என்றும், கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலை சிகிச்சையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்றும் காவேரி மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்தது.
இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து கருணாநிதியை சந்திக்க திமுக பிரமுகர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் தற்போது காவேரி மருத்துவமனையில் தான் உள்ளனர்
மேலும் காவேரி மருத்துவமனைக்கு வைகோ, உதயநிதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்களும் சற்றுமுன் வருகை தந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout