close
Choose your channels

திமுக தலைவர் மு.கருணாநிதி சென்னை மருத்துவமனையில் அனுமதி

Wednesday, November 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

DMK leader karunanidhi hospitalizedd

முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி இன்று அதிகாலை சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒவ்வாமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்கோளாறு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும், தொண்டர்கள் மற்றும் தலைவர்களை சந்திக்காமலும் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவை ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டதாகவும், பொதுமக்களும், திமுக தொண்டர்களும் கவலைப்பட வேண்டாம் என்றும் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள் உள்பட குடும்ப உறுப்பினர்களும், திமுகவின் முன்னணி தலைவர்களும் குவிந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment