இதுதான் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்

  • IndiaGlitz, [Thursday,August 09 2018]

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை தவிக்கவிட்டு மரணம் அடைந்தார். அன்னாரது உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்றிரவு முதல் இப்போதுவரை மெரீனாவில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் இறப்பை சென்னை மாநகராட்சி தற்போது பதிவு செய்து இறப்பு சான்றிதழையும் வழங்கியுள்ளது. இறப்பு சான்றிதழில் கருணாநிதியின் வயது 94 என்றும், மரணம் அடைந்த இடம் காவேரி மருத்துவமனை என்றும், அவரது தாயார் பெயர் அஞ்சுகம் என்றும், தாந்தையார் பெயர் முத்துவேல் என்றும், மனைவி பெயர் தயாளு கருணாநிதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கருணாநிதியின் நிரந்தர முகவரியாக அவரது கோபாலபுர வீட்டின் முகவரி அவருடைய இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

நயன்தாரா இதுவரை நடிக்காத வேடம்: புதிய தகவல்

நயன்தாரா கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வேடங்களிலும் நடித்துவிட்டார். சாதாரண கிராமத்து பெண் முதல் சிபிஐ அதிகாரி, கலெக்டர் வரை நடித்துவிட்ட நயன்தாரா, நடிக்காத வேடங்கள் குறைவு .

இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ: கலைஞர் குறித்து விஜயகாந்த் கவிதை

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் உள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் நேற்று கதறியழுதபடி ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார்

கருணாநிதி மறைவு எதிரொலி: ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

பிரபல நடிகை ஹன்சிகாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்களும், சக நடிகர், நடிகைகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காலத்தை வென்ற எழுத்தாளரை இழந்துவிட்டோம்: கருணாநிதி மறைவு குறித்து நயன்தாரா

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானதை அடுத்து நேற்றிரவு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது

கருணாநிதி எழுதி வைத்த உயில் இதுதான்: வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதி நேற்று சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.