கருணாநிதியின் உடல் வைக்கப்படும் இடங்கள் மற்றும் நேரம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு காலமானதை அடுத்து தமிழக மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையை நோக்கி திமுக தொண்டர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் திமுக தலைவரின் உடல் குடும்ப உறுப்பினர்களின் அஞ்சலிக்காகவும், தலைவர்கள் அஞ்சலி செலுத்தவும் எங்கெங்கு எவ்வளவு நேரம் வைக்கப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

இதன்படி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையும், சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரையும் இருக்கும் என்றும், அந்த சமயத்தில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் நாளை அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

More News

காலத்தை வென்று நிற்பார் கலைஞர்: கவிப்பேரரசு வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானதை அடுத்து திமுக தொண்டர்களும் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் பிரமுகர்களும்,

கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை: தமிழக அரசு அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்கோளாறு காரணமாக இன்று மாலை காலமானதை அடுத்து திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் மீளா சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கருணாநிதி மறைவு: தலைவர்கள் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய மறைவால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே சோகக்கடலில் மூழ்கியுள்ளது.

டெல்லியில் இருந்து அவசரமாக சென்னை திரும்புகிறார் கமல்ஹாசன்

திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி காலமானதை அடுத்து தமிழகமே சோகக்கடலில் மூழ்கியுள்ளது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மோடி, ராகுல்காந்தி சென்னை வருகை: 

திமுக தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை காலமானார். திமுகவின் உதயசூரியனாக இருந்த கருணாநிதியின் மறைவால் அக்கட்சியினர் மிகுந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்