கருணாகரனுக்கு ஜோடியாகிறாரா ஓவியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் ஓவியா வெளியே வந்தவுடன் அஜித், விஜய் படங்களின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு கடந்த சில நாட்களில் அவரது புகழ் உச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் சமூக வலைத்தளம் ஒன்றில் ரசிகர்களுடன் உரையாடி கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் கருணாகரனிடம் ஒரு ரசிகர், 'நீங்கள் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு ஓவியாதான் ஹீரோயின் என்று நீங்கள் கேட்டதாகவும் கேள்விப்பட்டேனே, அது உண்மையா? என்று கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள கருணாகரன், 'இப்ப நான் ஓவியா ஆர்மி கிட்ட திட்டு வாங்கனும். அதானே உங்க ஆசை' என்று பதிலளித்துள்ளார். கருணாகரனின் இந்த பதிலுக்கு திட்டு மட்டுமல்ல, குட்டும் வாங்குவீங்க என்று ஒரு ரசிகர் கமெண்ட் அளித்துள்ளார். ஆனால் ஏற்கனவே கருணாகரனும் ஓவியாவும் 'யாமிருக்க பயமே' படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments