close
Choose your channels

விக்ரம் படத்தை மிஸ் செய்த கருணாகரன்

Thursday, March 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பை இயக்குனர் விஜய் மில்டன் கொடுத்ததாகவும், ஆனால் அந்த நேரத்தில் அவர் கேட்ட தேதியில் தன்னால் கால்ஷீட் தரமுடியாததால் அந்த படத்தை மிஸ் செய்துவிட்டதாக காமெடி நடிகர் கருணாகரன் கூறியுள்ளார்.
ஆனால் அப்போது மிஸ் செய்த வாய்ப்பை தற்போது இருமுகன்' படத்தில் பெற்றுவிட்டதாகவும், சமீபத்தில் இயக்குனர் ஆனந்த் சங்கர் நான் நடித்த 'கணிதன்' படத்தை பார்த்துவிட்டு எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்றும் 'இருமுகன்' படப்பிடிப்பில் விரைவில் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கருணாகரன் கூறியுள்ளார்.
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஷிபுதமீன் தயாரித்து வருகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் லடாக், பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment