அஜித்துடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியே! கருணாகரன்

  • IndiaGlitz, [Wednesday,August 02 2017]

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை எதிர்பார்த்து அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்துடன் முதன்முதலில் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் கருணாகரன், அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

'அஜித்துடன் நடித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவரது எளிமையை பார்த்து வியந்தேன். அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் விவேகம் படம் குறித்து சுருக்கமாக கூற வேண்டுமானால் அது ரசிகர்களுக்கான விருந்து என்று தெரிவித்தார்.

மேலும் தல அஜித் பின்னால் பைக்கில் உட்கார்ந்து பயணம் செய்த அனுபவம் உண்டா? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாகரன், இல்லை, ஆனால் அவருடன் காரில் பயணம் செய்த அனுபவம் இருந்ததாக தெரிவித்தார். மேலும் 'விவேகம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி எது? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இதற்கு இயக்குனர் சிவா தான் பதில் சொல்ல வேண்டும் என்று கருணாகரன் கூறினார்.