அஜித் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,September 20 2016]

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் அஜித்துடன் முதல்முறையாக கருணாகரன் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்துள்ளதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த செய்தியை கருணாகரன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'முதன்முதலாக தல அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் ஆகியோர்களுக்கும் எனது நன்றிகள். மேலும் தல அவர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் என சிறப்பு நன்றிகள்' என்று கூறியுள்ளார். முதன்முதலாக அஜித்துடன் கருணாகரன் இணைவதால் இந்த படத்தின் காமெடி காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.