காலையில் எடப்பாடி, மாலையில் ஸ்டாலின்: அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களின் சந்திப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 29 2017]

தமிழக அரசியல் சூழ்நிலை கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் இன்று ஆட்சியை மாற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளதால் இதுவரை இல்லாத வகையில் எம்.எல்.ஏக்களுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக ஆதரவில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களான கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர்கள் காட்டில் கடந்த சில மாதங்களாகவே விடாமல் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. இந்த மூன்று எம்.எல்.ஏக்களின் ஆதரவு இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் இவர்களின் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது.
இந்த நிலையில் இன்று காலை மூவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துவிட்டு பின்னர் திடீரென மாலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர். பேரறிவாளனின் பரோலுக்கு நடவடிக்கை எடுத்த இருவருக்கும் நன்றி கூறவே இந்த சந்திப்பு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த சந்திப்புக்கு உண்மையான காரணமாக இருக்கும் என்று நம்புவோமாக!

More News

முதலமைச்சராக பழனிச்சாமியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால்..: நடிகர் செந்தில்

முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தையும் அகற்ற வேண்டும் என்று தினகரன் அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்...

நேற்று பிறந்த குழந்தைக்கு இன்று கடிதம் எழுதிய ஃபேஸ்புக் மார்க்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அவர்களை தெரியாத இளையதலைமுறையினர் இருக்க முடியாது...

அஜித்துக்கு அறிவுரை கூறிய மன்சூர் அலிகான்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்திற்கு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. ஆனாலும் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி இந்த படத்தின் வசூல் சாதனை செய்து வருகிறது...

ஓவியாவை தூக்கி உச்சத்தில் வைத்த ரசிகர்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் பரபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருசில நாட்களிலேயே ஓவியா பக்கம் திரும்பி விட்டது...

சினேகனை கடுப்பேற்றிய டாஸ்க்: அட்வைஸ் செய்த ஜூலி

பிக்பாஸ் வீட்டில் சினேகன் இதுவரை புறம் கூறுதல், கட்டிப்பிடி வைத்தியம், தேவையில்லாத விஷயத்தில் தலையிடுவது போன்ற வேலைகளை செய்து வந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் முதல் ஆளாக முழு ஈடுபாட்டுடன் செய்து வந்தார்.