என்னை கேள்வி கேட்க வாக்காளர்களுக்கு உரிமையில்லை. கருணாஸ்

  • IndiaGlitz, [Thursday,February 23 2017]

நகைச்சுவை நடிகர் கருணாஸ் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் சமீபத்தில் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தபோது கருணாஸ் சசிகலா அணிக்கு ஆதரவு அளித்தார்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் அவருக்கு வாக்களித்தார். இந்நிலையில் தன்மீது சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், 'திருவாடனை தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் தனக்கு ஓட்டு போட்ட 75000 பேர்கள் தவிர மீதிபேர் தன்னிடம் கேள்வி கேட்க உரிமையில்லை என்றும் கூறினார்.

மேலும் தான் எதையும் தைரியமாக பேசுபவன் என்றும் தன்னைப்பற்றிய அவதூறு பரப்புவதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருணாஸின் இந்த பேட்டி திருவாடனை தொகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

More News

பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நல்லது செய்து கொண்டே இருப்பேன். விஷால்

நடிகர் சங்க செயலாளரும், பிரபல நடிகருமான விஷால் தற்போது 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார். சிதம்பரம் மாவட்டம் பிச்சாவரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சிகிச்சையின்போது ஜெயலலிதா புகைப்படம் வெளியிடாதது ஏன்? அப்பல்லோ பதில் மனு தாக்கல்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது...

11 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திரும்பும் அஜித்தின் 'வரலாறு'

மூன்று வேடங்களில் தல அஜித் மற்றும் அசின் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய படம் 'வரலாறு.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த டிராபிக் ராமசாமி வழக்கில் முக்கிய உத்தரவு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் அணியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்...