காமெடி ஹீரோவுக்கு காமெடியனாக நடிக்கும் கருணாஸ்

  • IndiaGlitz, [Tuesday,January 12 2016]

ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தில் சந்தானம், கருணாஸ் இருவருமே நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தனர். பின்னர் இருவரும் கதாநாயகன்களாக மாறி ஒருசில படங்களில் நடித்து வந்தனர்.

கருணாஸ் அம்பா சமுத்திரம் அம்பானி', சந்த மாமா', ரகளபுரம்', லொடுக்குப் பாண்டி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் எந்த படமும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை.

ஆனால் சந்தானம் கதாநாயகனாக நடித்த 'வல்லனுக்கு புல்லும் ஆயுதம்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'இனிமே இப்படித்தான்' ஆகிய படங்கள் நல்ல வசூலை கொடுத்தது.

இந்நிலையில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ள அடுத்த படத்தில் கருணாஸ் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'எனக்கு இன்னொரு பெயர்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஃபேஸ்புக் மோகன் என்ற காமெடி கதாபாத்திரத்தில் கருணாஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

2.0 படத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை வரும். அக்சயகுமார் அதிர்ச்சி கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் '2.0'....

'பசங்க 2' படத்திற்கு பசங்களை அழைத்து செல்லும் பள்ளிகள்

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான 'பசங்க 2' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் ஆதரவால் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது....

'அரண்மனை'யின் உரிமையாளர் யார்? சுந்தர் சி விளக்கம்

கோலிவுட் இயக்குனர்களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா இதுவரை....

காஜல் அகர்வாலை பின்பற்றும் ப்ரியாமணி

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்து வரும் 'சக்கரவியூகா' என்ற படத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் ஒரு பாடலை பாடி பாடகியாக அறிமுகமாகியுள்ளார் ....

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் அதர்வா

தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில் படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் அதனையடுத்து சூப்பர் ஹிட் படமான 'அங்காடித்தெரு' மற்றும் 'அரவான்'...