'கூர்கா' பட விழாவில் பாஜகவை கிண்டலடித்த கரு.பழனியப்பன்

  • IndiaGlitz, [Tuesday,June 18 2019]

யோகிபாபு நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கிய 'கூர்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். அவர் இந்த விழாவில் பேசியதாவது:

ராஜராஜன் குறித்து கடந்த சில நாட்களாக பலர் பேசி கொண்டிருக்கின்றார்கள். ராஜராஜன் காலம் முடிந்துவிட்டது. இப்போது நிகழ்காலத்தில் என்ன நடக்கின்றது என்பதைதான் பார்க்க வேண்டும். ராஜராஜன் காலத்தில் நிலம் பிடுங்கப்பட்டதா? என்பதை வரலாற்று ஆசிரியர்கள் பார்த்து கொள்வார்கள். இன்று தஞ்சையில் மீத்தேன் எடுக்கப்பட்டு நம்முடைய நிலம் அழிக்கபப்ட்டு வருகிறது. அதை தடுப்பதுதான் முக்கியம்

கூர்கா' என்றால் தமிழ்நாட்டில் வாட்ச்மேன் என்றுதான் அர்த்தம். இந்தியாவில் சவுகிதார் என்று சொல்லப்படும் வாட்ச்மேன்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நமக்கு எண்டர்டெயின்மெண்ட் அளித்து வந்தார்கள். அவர்களுடைய செயல்களை பார்த்து நாம் சிரித்து வந்தோம். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கும் அவர்கள் தான் நமக்கு எண்டர்டெயின்மெண்ட்' என்று பாஜகவை மறைமுகமாக கரு.பழனியப்பன் கிண்டல் செய்தார்.