இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? கரு.பழனியப்பன் கேள்வியால் சலசலப்பு
- IndiaGlitz, [Monday,July 08 2019]
இயக்குநர் சங்க கூட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான காலி மது பாட்டில்கள் இருந்ததாகவும், இது என்ன இயக்குநர் சங்கமா? அல்லது கேளிக்கை விடுதியா? என கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியதால் இன்றைய இயக்குனர் சங்க கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தேர்தலில் போட்டியிடாமல் இயக்குநர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாரதிராஜா சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து இயக்குனர் சங்க நிர்வாகிகள் தேர்தலுடன் தலைவர் தேர்தலையும் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று சென்னை வடபழநியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன், 'இயக்குநர் சங்க பொதுக்குழுவிற்கு பெரும்பாலும் வராத பாரதிராஜா, கடந்தமுறை மட்டுமே வந்தார். பாரதிராஜாவால்தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என அவரே விரும்பியதில்லை. அவரை இங்கு அழைத்து வந்து அவமானப்படுத்த வேண்டாம். பாரதிராஜா தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்படுவதே சரியான முறை ஆகும் என்று கூறினார்.
மேலும் இயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் உள்ளன எனவும் இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? எனவும் கேள்வி எழுப்பியபோது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.