தறுதலையாகி தரங்கெட்ட ஆண்பிள்ளைகள்: பொள்ளாச்சி சம்பவம் குறித்து பிரபல இயக்குனர்
- IndiaGlitz, [Monday,March 11 2019]
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் நீதிமன்றம் அவர்களுக்கு இரண்டே நாளில் ஜாமீன் கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஜிவி பிரகாஷ், சித்தார்த் உள்பட பல திரையுலகினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். #Arrestpollachirapist என்ற ஹெஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. இவர்களை வெளியில் நடமாடவிடுவது பேராபத்து: ஜிவி பிரகாஷ்
இந்த நிலையில் இயக்குனர் கரு.பழனியப்பன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து கூறியபோது, 'பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை . என்று கூறியுள்ளார்.
இயக்குனர் கரு.பழனியப்பனின் இந்த டுவீட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள்.
— கரு பழனியப்பன் (@karupalaniappan) March 11, 2019
பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை .