தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்காதவர்களை நாட்டை விட்டு அனுப்பலாமா? கரு.பழனியப்பன்

  • IndiaGlitz, [Sunday,January 28 2018]

சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் இசைத்த போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாத காஞ்சி விஜயேந்திரருக்கு எதிர்ப்புகள் வலுத்து கொண்டே இருக்கும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதி கூட நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது எழுந்திருக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருந்தார். ராஜாவின் இந்த கருத்துக்கு பிரபல தமிழ் இயக்குனர் கரு.பழனியப்பன் ஆவேசம் அடைந்து கூறியதாவது:

ஒருத்தர் தமிழுக்காகவே காலம் முழுவதும் தொண்டு செய்து எழுந்து நிற்காமல் இருப்பதற்கும், ஒருத்தர் அவமதித்து தியானம் செய்வதாக எழுந்து நிற்காமல் இருந்ததற்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. கருணாநிதி அவர்கள் உடல்நிலை சரியில்லாததால் அவர் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன்னால் அவர் உடல் நலத்துடன் இருந்தபோது எழுந்திருக்காமல் இருந்திருக்கின்றாரா?

கருணாநிதியால் இயலவில்லை அதனால் அவர் எழுந்திருக்கவில்லை. அதேபோல் மடாதிபதியால் இயலவில்லையா? இன்னும் என்னவெல்லாம் அவரால் இயலவில்லை என்பதை சொல்லிவிடுங்கள். அவர் எப்ப எழுந்திருப்பார், எப்ப எழுந்திருக்க மாட்டார்' என்பதை தெரிந்து கொள்கிறோம் இனிமேல் மடாதிபதி என்றுமே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க மாட்டாரா? எவன் எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க மாட்டானோ, அவனையெல்லாம் நாட்டை விட்டு அனுப்பிவிடுவோமா?

இவ்வாறு கரு.பழனியப்பன் ஆவேசமாக கூறிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.