9 ஆண்டுகளுக்கு பின் கரு பழனியப்பன் இயக்கும் திரைப்படம்: டைட்டில் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் இயக்குனர் மற்றும் நடிகர் என வலம் வந்து கொண்டிருக்கும் கரு பழனியப்பன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
’பார்த்திபன் கனவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குநர் கரு பழனியப்பன் அதன்பின் ’சிவப்பதிகாரம்’ ’பிரிவோம் சந்திப்போம்’ ’மந்திரப்புன்னகை’ ’சதுரங்கம்’ ’ஜன்னலோரம்’ போன்ற திரைப்படங்களை இயக்கினார். மேலும் அவர் ’நட்பே துணை’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கரு பழனியப்பன் இயக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. அவர் இயக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’ஆண்டவர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பிரவீன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
With the blessings of Lord Murugan , we are happy to announce our #ProductionNo6 titled #Andavar
— LIBRA Productions (@LIBRAProduc) January 18, 2022
Direction by @karupalaniappan .
@thisisysr @VelrajR @Cinemainmygenes @rajeevan69 !!@fatmanravi @AsokanGI @VarunNZ @kamalakannan_11 @pradeeprchinna @onlynikil pic.twitter.com/wHhUkuDUla
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments