கரு.பழனியப்பன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மற்றும் நடிகர் கரு பழனியப்பன் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் ’பார்த்திபன் கனவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கரு பழனியப்பன், சில படங்களில் நடித்தார் என்பதும் அவரது நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ’நட்பே துணை’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கரு பழனியப்பன் ’கள்ளன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. இந்த நிலையில் இந்தப் படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கருபழனியப்பன், நிகிதா, மாயா, தினேஷ் சுப்பராயன், சௌந்தர்ராஜன் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சந்திரா தங்கராஜ் ன்பவர் இயக்கியுள்ளார் என்பதும், கே என்பவர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.
மேலும் கரு பழனியப்பன் தற்போது ‘டி பிளாக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ’ஆண்டவர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
#Kallan Movie From March 18th ??????@Karupalaniappan @powshya@soundar4uall @K_RiverRecords @timesmusicsouth @Etceteraenter @MathiyalaganV9 @murukku_meesaya @DoneChannel1 pic.twitter.com/fCXwFlYztW
— Diamond Babu (@idiamondbabu) March 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments