'காற்று வெளியிடை'க்கு பின் கார்த்தியின் அடுத்த விஷுவல் விருந்து. ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்

  • IndiaGlitz, [Saturday,March 11 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த டீசருக்கு 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்ததே இந்த டீசரின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

இந்நிலையில் கார்த்தி நடித்து வரும் இன்னொரு படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற திரைப்படம் ஒரு செம விஷுவல் விருந்தாக இருக்கும் என்று அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

'சதுரங்க வேட்டை' இயக்குனர் வினோத் இயக்கிவரும் “தீரன் அதிகாரம் ஒன்று“ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்சல்மர் என்ற பகுதியில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், அடுத்தகட்ட படப்பிடிப்பு பூஜ் என்ற பகுதியில் 20 நாட்கள் தொடர்ந்து படபிடிப்பு நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் கதைக்கு என்ன தேவையோ அது இந்த லொகேஷன்களில் சரியாக கிடைத்துள்ளதாகவும், படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகள் இந்த பகுதியில் படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனின் ஸ்டன்ட் அமைப்பில் ஹை வே ஆக்சன் காட்சி ஒன்றும் பூஜ் பகுதியில் நடைபெறவுள்ள படபிடிப்பில் படமாக்கப்படவுள்ளதாகவும், 40 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பின் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் விருந்தாக இருக்கும் என்றும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கூறினார்.