பூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Wednesday,March 13 2019]

'தேவ்' படத்தை அடுத்து கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின், டூயட் பாடல்கள் இன்றி உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்தியின் 19வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த 'ரெமோ' படத்தை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகிய 'கீதா கோவிந்தம்' படத்தின் நாயகியாக நடித்தவர் என்பதும், இவர் அறிமுகமாகும் தமிழ்ப்படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது

விவேக் மெர்வின் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது