close
Choose your channels

'கார்த்திகேயா 2' நிகில் நடிக்கும் அடுத்த படம்.. டைட்டில் அறிவிப்பு..!

Friday, August 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் புகழ்பெற்ற கதாநாயகன் நிகில், தனது 20வது படத்திற்காக இயக்குனர் பரத் கிருஷ்ணமாச்சாரி உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘சுயம்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். ’சுயம்பு’ என்ற தலைப்பும் செங்கோல் தாங்கிய படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. நிகிலை ஒரு மூர்க்கமான போர்வீரனாக காட்டிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமோக வரவேற்பை பெற்றது.

படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், படத்தின் ரெகுலர் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது. நிகில் ஒரு போர் வீரனாக குதிரையில் சவாரி செய்யும் போது ஒரு நாகத்தை நோக்கி அம்பு எய்வது போல் இந்த போஸ்டரில் உள்ளது. அவரது தோற்றம் முதல் காஸ்ட்யூம் என இதுவரை நாம் பார்த்திராத புதிய நிகிலை ரசிகர்கள் பார்க்க இருக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் போலவே, இந்த புதிய போஸ்டரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதில் நிகில் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படம் நடிகர் நிகிலின் கேரியரில் அதிக பொருட்செலவிலும் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடனும் உருவாக இருக்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment