'ஜிகர்தண்டா 2' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

  • IndiaGlitz, [Saturday,October 07 2023]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த 'ஜிகர்தண்டா 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதால் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ’மாமதுரை’ என்ற சிங்கிள் பாடல் வரும் 9ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் உருவாகி உள்ள ’மாமதுரை’ என்ற பாடலை கேட்டவுடன் டான்ஸ் ஆட வைக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'என்னால் ரூ.3000 கோடி வசூல் செய்யும் படம் எடுக்க முடியும்.. இவர்கள் இருவரும் நடித்தால்.. அட்லி பேட்டி..!

இயக்குனர் அட்லி சமீபத்தில் அளித்த பேட்டியில் 'எனக்கு இந்த இருவர் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் ரூ.3000 கோடி வசூல் செய்யும் படத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் இருந்து நயன்தாரா நீக்கமா? என்ன காரணம்?

லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து.. 'மஞ்சள் வீரன்' அவ்வளவுதானா?

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக காஞ்சிபுரம் ஆர்டிஓ தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் வாரமே வெளியேறுவது இந்த மூவரில் ஒருவரா? பிக்பாஸ் வாக்குகள் விவரங்கள்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஐந்து நாள் நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதல் வாரமே நாமினேஷன் படலம் நடந்தது என்பதும் இதில் போட்டியாளர்கள்

வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஏலியன்.. கிராபிக்ஸ் காட்சிகளால் அசத்தும் 'அயலான்' டிரைலர்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான 'அயலான்' என்ற திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும்