கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட ஹீரோ அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,January 28 2019]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தின் வசூல் மழையால் அனைத்து விநியோகிஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை காசி திரையரங்கில் நேற்று 'பேட்ட' வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு ரசிகர்களோடு ரசிகராக படம் பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், 'பேட்ட' திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகிவிட்டபோதிலும் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பது போன்ற உணர்வு உள்ளது. மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றது' என்று கூறினார்.

மேலும் நடிகர் தனுஷை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பதும் 'பேட்ட' படத்தால் இந்த படம் தள்ளிப்போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

கட் அவுட்டுக்கு அண்டா பால்: சிம்பு புதுவிளக்கம்

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்பட்ம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சிம்பு சமீபத்தில் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்

'தல 59' படக்குழுவினர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் போனிகபூரின் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'பிங்க்' ரீமேக் திரைப்படம் உருவாகவிருப்பதாக அதிகாரபூர்வமான செய்தி சமீபத்தில் வெளியானது.

நடுக்கடலில் பேனர் கட்டிய சிம்பு ரசிகர்கள்: வேற லெவலில் VRV புரமோஷன்!

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

பாஜகவில் இணைந்தார் விஜய்-விஜயகாந்த் பட நாயகி

இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் சினிமா நட்சத்திரங்கள் பலர் களத்தில் குதிக்க காத்திருக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் படத்திற்கு புரமோஷன் செய்யும் தனுஷ்

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில், ஜிவி பிரகாஷ் நடித்த படம் ஒன்றுக்கு தனுஷ் இன்று புரமோஷன் செய்யவுள்ளார்.