ரஜினி, விஜய் படங்களை அடுத்து ஜப்பானில் சக்கை போடு போடும் கார்த்திக் சுப்புராஜ் படம்.. மகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Monday,April 29 2024]

கடந்த பல ஆண்டுகளாக ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வசூலை குவித்து வருகிறது என்பதும் அவர் நடித்த 'முத்து’ படத்தில் இருந்து அதன் பிறகு வெளியான அனைத்து படங்களும் ஜப்பானில் அதிக வசூலை செய்து வருகிறது என்பதும் தெரிந்தது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் படங்களும் ஜப்பானில் நல்ல வசூலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினி, விஜய் படங்களை அடுத்து தற்போது மேலும் சில தமிழ் படங்கள் ஜப்பானில் வசூலை குவித்து வருவதாகவும் அதில் ஒன்றுதான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று தகவல் வெளியாகியுள்ளது

இந்த படம் ஏற்கனவே தமிழகம் உள்பட உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது ஜப்பான் உள்பட மேலும் சில நாடுகளில் இந்த படம் சக்கை போடுவதாக கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்

குறிப்பாக ஜப்பானில் உள்ள திரைப்படங்களில் இந்த படம் ஓடும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் நிமிஷா சஞ்சயன், இளவரசு, நவீன் சந்திரா, சத்யன் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.