'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்து உள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் செப்டம்பர் 11ஆம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என்று கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்பதையும் அவர் இன்று உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கும் போது இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த டீசரை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
#JigarthandaDoubleX
— karthik subbaraj (@karthiksubbaraj) September 9, 2023
More Than a 'Teaser'
Releasing on 11th September @ 12:12 pm
Let's Start XXing!!#MorethanATeaser#DoubleXDiwali @offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh@kunal_rajan @sheriffchoreo@kaarthekeyens @stonebenchers @5starcreationss… pic.twitter.com/bGKFGR8GK4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments