கார்த்திக் சுப்புராஜின் இணை இயக்குனரின் புதிய படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த விஜய்ராஜ் என்பவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். நளனும் நந்தினியும், சுட்டக்கதை, நட்புனா என்னன்னு தெரியுமா' ஆகிய படங்களை தயாரித்த ரவீந்தர் சந்திரசேகரன் அவர்களின் லிப்ரா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது
மலையாள திரையுலகில் புகழ்பெற்று விளங்கி வரும் ஆதில் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் பிரபல மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற "Dance 4 Dance" நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதாநாயகியாகச் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தில் நடித்த அஞ்சு குரியன் நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் ஈரோடு மகேஷ், குரேஷி, ஈஸ்வர ரகுநாதன், நிம்மி இமானுவேல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கிரிநந்த் இசையில் ஓம் நாராயண் ஒளிப்பதிவில் ஆலன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments