'ஜிகர்தண்டா 2' கதைக்களம் 1975 என தேர்வு செய்ததற்கு ரஜினி தான் காரணம்: கார்த்திக் சுப்புராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜிகர்தண்டா 2’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது என்பது இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம். மேலும் 1975ஆம் ஆண்டு தான் படத்தின் கதைக்களம் என்றும் டிரைலரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் கதைக்களம் 1975 ஆம் ஆண்டு நடந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த படத்தின் நாயகன் முதல் கருப்பு ஹீரோ என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால் அதை ரஜினிகாந்த் அவர்களின் தாக்கத்தை வைத்து தான் கதை எழுதினேன்.
கடந்த 1975 ஆம் ஆண்டு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ அறிமுகமான இந்த ஆண்டை எனது கருப்பு ஹீரோ கேரக்டருக்காக பயன்படுத்திக் கொண்டேன். அந்த இடத்திலிருந்து தான் இந்த படத்தின் முக்கியமான கதை மற்றும் திரைக்கதை தொடங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout