விஜய்க்கு என் கதை செட் ஆகவில்லை. கார்த்திக் சுப்புராஜ்

  • IndiaGlitz, [Saturday,June 04 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து விஜய்யின் 60வது படத்தை இயக்க பலத்த போட்டி இருந்தது என்பதும் அந்த போட்டியில் இயக்குனர் பரதன் வெற்றி பெற்று தற்போது அவருடைய 60வது படத்தை இயக்கி வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தை இயக்கும் இயக்குனர்களின் லிஸ்ட்டில் இருந்த கார்த்திக் சுப்புராஜ், விஜய்யின் 60வது படத்தை இயக்க தனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் தன்னுடைய கதை விஜய்க்கு செட் ஆகாததால் அந்த வாய்ப்பு நழுவி போனதாகவும் கூறியுள்ளார். மேலும் ரஜினிக்கு தான் எழுதி வைத்துள்ள கதை நிச்சயம் அவருக்கு பொருந்தும் என்றும் வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் ரஜினி படத்தை இயக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' திரைப்படம் நேற்று விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஒருநாள் கூத்து' எதை குறிக்கின்றது. இயக்குனர் நெல்சன் விளக்கம்

அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள 'ஒருநாள் கூத்து' வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் நெல்சன்...

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' சென்சார் தேதி

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ்...

'ரெமோ'வில் இணைந்த தனுஷ் பட பாடகர்

தனுஷ் நடித்த அனேகன்' படத்தில் இடம்பெற்ற 'தங்கமாரி ஊதாரி' பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியது...

சுந்தர் சியின் 'முத்தின கத்தரிக்கா' ரிலீஸ் தேதி

சுந்தர் சி நடிப்பில் அவருடைய உதவியாளர் வெங்கட்ராகவன் இயக்கிய 'முத்தின கத்தரிக்கா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில்...

சூரி சாப்பிட்ட பரோட்டா எத்தனை? அவரே அளித்த பதில் இதோ

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட சூரி...