'ஜிகர்தண்டா 2' படத்தின் சூப்பர் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்.. இணையத்தில் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா’ திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 9 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி மதுரை உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவையும் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வீடியோவில் அது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் ‘ஜப்பான்’ சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ஆகிய படங்களுடன் தீபாவளி அன்று ’ஜிகர்தண்டா 2’ வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.
It's a WRAP for #JigarthandaDoubleX - see you in theatres this Diwali! #J2XShootWraps #DoubleXDiwali @karthiksubbaraj @offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh @kaarthekeyens @stonebenchers @5starcreationss @alankar_pandian @onlynikil pic.twitter.com/8REEmw4sZD
— HemananthBadmanathan (@hemananth_pro) July 3, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments