'இறைவி'யில் தயாரிப்பாளர் வேடத்தை மறுத்த பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Sunday,June 05 2016]

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டருக்காக நடிகர் மோகனை கார்த்திக் சுப்புராஜ் அணுகியதாகவும் ஆனால் துரதிஷ்டவசமாக அது நிறைவேறவில்லை என்றும் கூறப்படுகிறது.
'இறைவி' படத்தில் இயக்குனராக நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் படத்தின் தயாரிப்பாளராக நடிகர் விஜய்முருகன் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டு வரும் நிலையில் இந்த கேரக்டரில் நடிக்க முதலில் நடிகர் மோகனைத்தான் கார்த்திக் சுப்புராஜ் அணுகினாராம். ஆனால் மோகன் இந்த கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டதாகவும், அதன் பின்னரே விஜய்முருகன் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1980ஆம் ஆண்டுகளில் மோகன் ஹீரோவாக நடித்து ரஜினி கமலுக்கு இணையாக பல வெள்ளிவிழா படங்களில் நடித்தவர் என்பது அனைவரும் தெரிந்ததே...