'பேட்ட 2' உருவாகிறதா? கார்த்திக் சுப்புராஜ் அதிரடி பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’பேட்ட’ திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியின் பழைய ஸ்டைல் மற்றும் இளமையான ரஜினியை திரையில் பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த படம் வசூலில் அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அவ்வப்போது ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ’பேட்ட’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கார்த்திக் சுப்புராஜ் ’பேட்ட’ படத்தின் திரைக்கதையை உருவாக்கும்போது அதன் இரண்டாம் பாகம் குறித்து எந்த ஐடியாவும் தனக்கு இல்லை என்றும் ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறும் கதைகளைக் கேட்டால் உண்மையிலேயே ’பேட்ட’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் நேரமும் காலமும் கூடி வந்தால் எதிர்காலத்தில் ’பேட்ட 2’திரைப்படம் உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரை ரஜினிகாந்த் கேரக்டர் கொன்று பழி வாங்குவதோடு படம் முடிந்திருக்கும். அதன்பின் என்ன நடந்திருக்கலாம் என்பது குறித்த கற்பனைகளை ரசிகர்கள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். இவற்றில் ஏதாவது ஒன்றை கருவாக எடுத்துக் 'பேட்ட 2’ திரைப் படத்தின் திரைக்கதையை கார்த்திக் சுப்புராஜ் உருவாக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout