மனைவி விளையாடிய போட்டியில் ரெஃப்ரியை வறுத்தெடுத்த தினேஷ் கார்த்திக்
- IndiaGlitz, [Sunday,April 15 2018]
பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லீங்கல் ஒரு ஸ்குவாஷ் வீராங்கனை என்பது தெரிந்ததே. தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சமீபத்தில் நடந்த ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தீபிகாவும், சவுரவ் கோஷலும் ஆஸ்திரேலிய அணியினரை எதிர்த்து விளையாடினர். இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் தீபிகா-சவுரவ் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இந்த போட்டியில் நடுவரின் ஒருசில முடிவுகள் சர்ச்சைக்குள்ளானது. தீபிகா ஏற்கனவே இதுகுறித்து தனது பேட்டியில் அதிருப்தியை தெரிவித்த நிலையில் தற்போது தீபிகாவின் கணவர் தினேஷ் கார்த்திக்கும் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியுள்ளார்.
தீபிகா விளையாடிய கலப்பு இரட்டையர் போட்டியில் நடுவரின் ஒருசில முடிவுகளால் ரொம்ப அப்செட் ஆனேன். நிச்சயமாக தீபிகா-சவுரவ் அணிக்கு தங்கம் கிடைத்திருக்க வேண்டிய போட்டி அது. இருப்பினும் இருவரும் மிக அற்புதமாக தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி தேசத்திற்கும் எனக்கும் பெருமை சேர்த்த இருவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.