புலம்புவதை விட்டு விட்டு ஆம்பளையா இருக்க பழகு - கெளதம்மேனன்
Send us your feedback to audioarticles@vaarta.com
'துருவங்கள் 16' என்ற படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கும் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் நேற்று திடீரென நம்பிக்கை துரோகம் குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்து கோலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். அவருக்கு நம்பிக்கை மோசடி செய்தது யாராக இருக்கும் என்று அனைவரும் குழப்பத்தில் இருந்த நிலையில் அவருடைய டுவீட்டுக்கு காரணம் இயக்குனர் கவுதம் மேனன் என்று தற்போது தெரியவந்துள்ளது.
'நரகாசுரன்' படத்தை கவுதம் மேனன் தயாரிப்பதாக கூறினாலும் அவர் இந்த படத்திற்காக எந்த முதலீடும் செய்யவில்லை என்றும் அவர் கைகாட்டிய பத்ரி என்பவரும், நானும் தான் இந்த படத்திற்காக செலவு செய்தோம் என்றும், ஆனால் இந்த படத்தில் கிடைத்த பணத்தை வைத்து அவர் தனது மற்ற படங்களுக்கு செலவழித்ததாகவும், இதனால் 'நரகாசுரன்' படத்தின் போஸ்ட் புரடொசக்ன்ஸ் பணிகள் தாமதம் ஆகி வருவதாகவும் கார்த்திக் நரேன் கவுதம் மேனன் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பலர் கவுதம்மேனன் குறித்து மாறுபட்ட கருத்துக்களை கூறினாலும் அவரை நம்பியதாகவும், ஆனால் அவர் எங்களை குப்பை போல் உதறிவிட்டதாகவும், இனிமேலாவது என்னை போன்ற இளம் கலைஞர்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.
ஆனால் இதனை மறுத்துள்ள கவுதம் மேனன், இந்த படத்திற்காக தான் ரூ.9 கோடி செலவு செய்துள்ளதாகவும், படத்தில் பணிபுரிந்தவர்களின் சம்பள பாக்கி விரைவில் தீர்க்கப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com