சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார் மனைவி அம்ருதா ஸ்ரீனிவாசன்.

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

 

அம்ருதா ஸ்ரீனிவாசன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார் மற்றும் கள்ளச்சிரிப்பு என்ற வலைத்தொடரில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார்.மென்டல் மாடிலோ, லிவின் போன்ற வலைத் தொலைக்காட்சியில் நடித்திருந்தார்,

2019 ஆம் ஆண்டு தேவி என்னும் திரைப்படத்தில் கார்த்தியின் நண்பராக நடித்திருந்தார்.அம்ருதா சீனிவாசன் அவியல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.கள்ளச்சிரிப்பு என்ற வலைத்தொடருக்காக அவர் அதிக பாராட்டை பெற்றார்.

மேலும் இது குறித்து இந்தியா டுடே கூறியது,'ஒரு கதாநாயகி சுய தியாகம் செய்வது வெறும் கற்பனை அல்ல.அவள் அவளையும் அவள் வாழ்க்கையையும் முதன்மைப்படுத்தி ஒரு உன்மையான அந்த கதாபாத்திரமாகவே நடிப்பது சிறந்தது'என கூறியுள்ளனர்.

பிறகு இவர் முன்னாள் நடிகர் மற்றும் காமெடியனான கார்த்திக் குமாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் .அப்போது அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

கார்த்திக் குமாருக்கு ஏற்கனவே சினிமாவின் பின்னணி பாடகியான சுசித்ராவுடன் திருமணம் முடிந்தது.ஆனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

இறுதியாக அம்ருதா ஸ்ரீனிவாசன் தன்னை விட 16 வயது அதிகம் உள்ள கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில் கூட கார்த்திக் குமார் குறித்து சுஜி முன் வைத்த குற்றச்சாட்டுகள் பலரை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.

கார்த்திக் குமாருக்கு 44 வயது மற்றும் அம்ருதாவுக்கு 28 வயது ஆகிறது.இருப்பினும் இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்தியுள்ளனர்.